வவுனியாவில் சூழலைப்பாதுகாக்கும் ‘தூய்மையான வவுனியா நகரம் ‘ செயற்றிட்டம் ஆரம்பம்வவுனியா வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியா நகரசபையினருடன் இணைந்து சூழலைப்பாதுகாக்கும் சமூக நலன் செயற்றிட்டமான “தூய்மையான வவுனியாநகரம்” எனும் செயற்றிட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் சமூக நலன் சார்ந்த செயற்றிட்டத்தின் கீழ் வவுனியா நகர்ப்பகுதிகளில் முக்கிய இடங்களில் வைப்பதற்காக முதற்கட்டமாக 36 குப்பை தொட்டிவைத்தல் மற்றும் அதனுடன் இணைந்தவாறான மரநடுகை செயற்றிட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் தலைவர் எஸ் . சுஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வவுனியா நகர சபை தலைவர் இ .கௌதமன் , உப நகரபிதா கு . குமாரசாமி , செயலாளர் இ . தயாபரன் , நகரசபை உறுப்பினர் ரி . கே . இராஜலிங்கம் ,

வவுனியா பிராந்திய பிரதி சுகாதார சேவைப்பணிப்பாளர் மகேந்திரன் , சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பிரிஸ்குறூஸ் , சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் டி சில்வா, வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மானவடு .

வர்த்தகர் சங்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர்கள் , வர்த்தகர்கள் , பொது அமைப்புக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

hey