வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக திலீபன் அவர்கள் நியமனம்திலீபன்

வவுனியா மாவட்ட ஒருங்ணைப்புகுழு தலைவராக கு. திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட கு. திலீபன் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகியுள்ள நிலையில் அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் ரிசாட் பதியுர்தீன், கே.கே.மஸ்தான், தர்மபால செனவிரத்தின ஆகியோரே தனித்து இணைத்தலைவர்களாகவும் இணை தலைவர்களாக நியமனம் வழங்கப்பட்ட காலத்தில் செல்வம் அடைக்கலநாதன் சி.வி.விக்னேஸ்வரன் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் இப்பதவிகளில் இருந்துள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திற்கு டக்ளஸ் தேவானந்தாவும் மன்னார் மற்றும் முல்லைத்தீவுக்கான ஒருங்ணைப்புகுழு தலைவராக கே. கே. மஸ்தானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

hey