இலங்கையின் புதிய பிரதமராக சற்றுமுன் பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஸ ( நேரடி ஒளிபரப்பு வன்னி பிபிசி)புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன் பதவியேற்றுள்ளார்.

களனி ரஜமகாவிகாரையில் அவர் பதவியேற்றுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்காவின் 4வது தடவையாக பிரதமராக பதவியேற்கின்றார்.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.

வரலாற்றில் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய விருப்பு வாக்குகள் இதுவாகும்.

hey