
வவுனியா புகையிரத நிலையம்
வவுனியா நகரம் வடமாகாணத்தின் வரவேற்பு வாசல் என பலரினாலும் போற்றப்படுகின்ற போதிலும் வவுனியா புகையிரத நிலையம் ப ற்றைகளினால் சூழ ப்பட்டு அல ங்கோலமாக காணப்படுகின்றது.
தொடரூந்து மூலமாக தினசரி ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் , வெளிநாட்டு பயணிகள் என பலரும் வவுனியாவிற்கு வருகை தருகின்றனர். எனினும் வவுனியா புகையிரத நிலையம் இவ்வாறு காணப்படுவது வவுனியா நகரின் அழகினை சீ ர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.
புகையிரத நிலையத்தினை அழகுபடுத்தும் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.