ஜனாதிபதி உடனடி தீர்வை வழங்க வேண்டும் – வவுனியா காஞ்சூரமோட்டை கிராம மக்கள் கோரிக்கை



வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருதோடை கிராம அலுவலர் பிரிவில் காஞ்சூரமோட்டை கிராம மக்கள் தமக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய கோரி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போ ராட்டம் நேற்று 5வது நாளாகவும் மேற்கொண்டுள்ளனர்.

பன்னெடுங்காலமாக குறித்த கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்கள் யுத்த சூழல் காரணமாக குறித்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று இருந்த நிலைமையில் மீண்டும் 2018 ம் ஆண்டு இந்த பிரதேசத்தில் மீள் குடியேறியுள்ளனர்.

எனினும், இன்று வரை தமது அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும்,

இதற்கு பிரதான காரணமாக வனவள திணைக்களம் காணப்படுவதாகவும் குற்றம் சுமத்தி தமக்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தொடர் க வனயீர்ப்பு போ ராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இவர்கள் ஆரம்பித்த போ ராட்டமானது நேற்று ஐந்தாவது நாளாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையிலும் இதுவரை தமக்கான எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்கவில்லை என போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், நாட்டினுடைய ஜனாதிபதி அவர்கள் மிக விரைவாக தங்களுடைய பி ரச்சனைக்கு தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை தீர்வு கிடைக்கும் வரை தமது போ ராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மீள் குடியேறிய காலம் முதல் தங்களுடைய பூர்வீக காணிகளை துப்பரவு செய்வதற்கு வளவள திணைக்களம் த டையாக இருப்பதாகவும்,

தாங்கள் காணிகளை துப்ப ரவு செய்கின்ற போது அல்லது அபிவிருத்தி வேலைகளை செய்கின்ற போது அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதனால் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக மக்கள் கூறியுள்ளனர்.

குறிப்பாக குறித்த கிராமத்தில் தங்களுடைய காணிகளை து ப்பரவு செய்ய முடியாத நிலை காணப்படுவதோடு தங்களுடைய பிரதான வாழ்வாதார தொழிலாக விவசாயத்தை மேற்கொள்ள முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும் காணப்படுகின்றார்கள்.

வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டபோதும் வீட்டுத் திட்டங்கள் முழுமையாக அதற்கான நிதிகள் தொடர்ச்சியாக கிடைக்கப் பெறாத பட்சத்தில் தங்களுடைய கிராமத்தை அபிவிருத்தி வேலைகளை செய்ய முடியாத தி ண்டாட்டத்தில் மக்கள் இருக்கின்றனர்.

குறிப்பாக இந்த கிராமத்திற்கான மின் இணைப்புகளும் இதுவரை வழங்கப்படாத நிலையில் மின்சார சபையினர் மின் இணைப்புகளை வழங்குவதற்கு வீதியோரத்தில்

இருக்கின்ற 14 மரங்களை வெட்ட வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாகவும் இந்த 14 மரங்களை வெ ட்டி தங்களுடைய பகுதிக்கு மின்னிணைப்பு கொண்டுவருவதற்கு வனவள திணைக்களம் மு ட்டுக்க ட்டையாக இருப்பதாக மக்கள் கு ற்றம் சு மத்துகின்றனர்.

மின்கம்பங்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டு மிக நீண்ட காலமாக காத்திருக்கின்ற போதும் இதுவரை தமக்கான மின் இணைப்பு வழங்குவதற்கு வனவள திணைக்களம் தொடர்ந்தும் த டை வி தித்து வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் தங்களுடைய காணிகளில் தாங்கள் புனரமைப்பு பணிகளை செய்வதற்கு திணைக்களத்தினர் த டை வி திக்கக் கூடாது எனவும் உடனடியாக தமது கிராமத்திற்கான

மின் இணைப்பு வழங்குவதற்கு தடையாக காணப்படுகின்ற 14 மரங்களைவெ ட்டி மின் இணைப்புகளை வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நாட்டினுடைய ஜனாதிபதி தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

தங்களுக்கான காணிகளுக்குரிய காணி உரிமைகள் வழங்கப்பட்டு தாங்கள் காணிகளை துப்பரவு செய்து தங்களுடைய தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்க வேண்டுமெனவும்,

அத்தோடு மின்னிணைப்பு கிடைக்க வேண்டும் இந்த இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்து தொடர் கவ னயீர்ப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தங்களுக்கான இந்த இரண்டு பிர ச்சினைகளுக்கான தீர்வுகளும் இல்லாத பட்சத்தில் தங்களுடைய போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறும் என தெரிவித்துள்ளனர்.

hey