வவுனியாவில் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் கலந்துரையாடல்!!



hசெய்திகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளின் போது நடுநிலையாக செயற்படுமாறு ஊடக நிறுவனங்களிடம் கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற வடக்கு மாகாண தேர்தல் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சுவ ரொட்டிகள், ப தாதைகள், புகைப்படங்கள் என்பவற்றை காட்சிப்படுத்த 1981 இலக்கம் 1 நாடாளுமன்ற சட்டத்திட்டங்களுக்கு அமைய த டை வி திக்கப்பட்டுள்ளது.

எனினும், வேட்பாளரின் தேர்தல் பி ரச்சார அலுவலகங்களில் கட்சியின் பெயர், சின்னம், இலக்கம் என்பனவற்றை காட்சிப்படுத்த முடியும்.

அத்துடன் தேர்தல் பிரசாரக்கூட்டம் இடம்பெறும் பகுதியில் மாத்திரம் சுவரொட்டிகளை கா ட்சிப்படுத்த முடியும்.

தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்களை கட்டு ப்படுத்த முடியாது.

செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளின் போது நடுநிலையாக செயற்படுமாறு ஊடக நிறுவனங்களிடம் கோரிக்கை வி டுப்பதற்கும் எதிர்பார்க்கின்றேன்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பிரச்சாரம் செய்வதற்கு சகல கட்சிகளுக்கும் காலத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.