IPL மற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில்?



2020ம் ஆண்டு IPL போட்டிகளை இலங்கையில் அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவது தொடர்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை யோசிக்கலாம் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலக கிண்ண 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபரில் நடக்காது ஒத்திவைக்கப்பட்டால், IPL போட்டிகளை செப்டம்பர்- ஒக்டோபர் மாதங்களில் நடத்தமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

IPL போட்டிகளை இந்தியாவில் நடத்தாது வெளிநாடு ஒன்றில் நடத்தினால் ஏற்கனவே ஒரு அணிக்கு 14 போட்டிகள் என்ற முறையை மாற்றி ஒரு அணிக்கு 7 போட்டிகள் என்ற அளவில் குறைத்து நடத்தமுடியும் என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாகிஸ்தானில் இந்த வருடம் நடத்தப்படவிருந்த ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இலங்கையில் நடத்த வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப்போட்டிகளை எதிர்வரும் செப்டம்பரில் பாகிஸ்தானில் நடத்தமுடியாமல் போனால் அந்த வாய்ப்பை இலங்கைக்கு வழங்க பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளது.

இலங்கையில் பெருமளில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளமையை அடுத்தே இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பான இறுதிமுடிவு இந்தமாத இறுதியில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

hey