வவுனியா இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று



வவுனியா இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலையில்

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து அங்கு பணியாற்றும் 31 ஊழியர்கள் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டதுடன் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் எழுமாற்றாக ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு நேற்றையதினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்றுள்ளான நபர்களை சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருவதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளனர்.

hey