முறிகண்டி சிகிச்சை நிலையத்தின் சேவை ஆரம்பம்



முல்லைத்தீவு – முறிகண்டி பகுதியில் அமைக்கப்பட்ட புதிய கொவிட் – 19 சிகிச்சை நிலையம், நேற்று (15) திறந்துவைக்கப்பட்டது.

கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது, 300 படுக்கை வசதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த கொவிட் 19 சிகிச்சை நிலையமானது நேற்று முதல் பணிகளை ஆரம்பிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த சிகிச்சை நிலையம், கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைவின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவுள்ளது.

இதில், மாங்குளம் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கை சீன நாடாக மாறிய தருணம்: இந்த வீடியோ கொஞ்சம் பாருங்க சிங்களமும் சீனாவும் ஒன்றாகிற்றாங்க

hey