வடக்கில் திடீரென அதிகரித்த கொ ரோனா தொ ற்றாளர்கள் : மேலும் 36 பேருக்கு தொ ற்று உறுதிவடக்கு மாகாணத்தில் மேலும் 36 பேருக்குக் கொ ரோனா வை ரஸ் தொ ற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, யாழ்ப்பாணத்தில் 29 பேருக்கும் மன்னாரில் ஐவருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் தொ ற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 644 பேரின் மாதிரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 13 பேருக்குத் தொ ற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் எட்டுப் பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களாவர்.

மேலும், யாழ்ப்பாணம் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவன ஊழியர்களிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தனியார் வங்கி ஊழியர் ஒருவருக்கும் நட்சத்திர விடுதி பணியாளர் ஒருவருக்கும் கொ ரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வருக்கும் சாவகச்சேரி வைத்தியசாரையல் ஐவருக்கும் யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு யாழ். சி றைச்சாலையில் இருவருக்கும் கொ ரோனா தொ ற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் வைத்தியசாலையில் இருவருக்கும் மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும் வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் வி டுதியில் ஒருவருக்கும் தொ ற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

hey