வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுக்குள் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம் தி ருட்டுவவுனியா, மன்னார் வீதியில் உள்ள கல்வி நிலையம் முன்பாகவுள்ள ஒழுங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுக்குள் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம் தி ருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசில் இன்று (27.04) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, மன்னார் வீதியில் உள்ள கல்வி நிலையம் ஒன்றின் முன்னாலுள்ள ஒழுங்கையில் உள்ள பந்தல் சேவை முன்பாக நேற்று மாலை (26.04) தனது முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு அருகில் இருந்த கடை ஒன்றுக்கு சென்று, மீண்டும் திரும்பி வந்த முச்சக்கர வண்டி சாரதி தனது முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார்.

சிறிது தூரம் சென்ற பின்னர் முச்சக்கர வண்டியின் பெட்டியை பார்த்த போது அது திறக்கப்பட்டு பின்னர் மூடியிருந்தமைக் தெரியவந்துள்ளது. இதனையடுத்து முச்சக்கர வண்டி பெட்டியை திறந்து பார்த்த போது அதில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம் தி ருடப்பட்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த முச்சக்கர வண்டி நிறுத்திய இடத்தில் காணப்பட்ட சிசீரீவி காணொளிகளை பார்வையிட்ட போது பிறிதொரு முச்சக்கர வண்டியில் வந்த மூவர் வேறு சாவி ஒன்றைப் போட்டு முச்சக்கர வண்டி பெட்டியை திறந்து பணத்தை எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

பா திக்கப்பட்ட சாரதி வவுனியா பொலிசில் மு றைப்பாடு செய்துள்ளார். பொலிசார் சிசீரீவி காணொளி உதவியுடன் தீ விர வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

hey