திருமணத்திற்கு ஆசையாய் காத்திருந்த இளம் பெண் : இறுதியில் வருங்கால கணவனால் நடந்த ச.ம்பவம்இந்தியாவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண் ஒருவரிடம் நெருங்கி பழகி 30 லட்சத்திற்கும் மேல் மோ.சடி செய்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

தமிழகத்தின், சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் இந்து (23). இவர், சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு, பெற்றோர் இணையதளம் மூலம் வரன் பார்த்து வந்துள்ளனர். அப்போது பெங்களூருவை சேர்ந்த பொறியாளர் ஒருவர் இவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். பொறியாளரை இந்துவுக்கும் பிடித்திருந்ததால், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதையடுத்து, அவருடன் இந்து தினமும் செல்போனில் பேசி வந்துள்ளார். அதன் பின் இருவரும் நேரில் சந்தித்து நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளனர்

இந்நிலையில், அந்த நபர் அவசர தேவையாக தனக்கு ஒரு 35 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக கூறி நடித்துள்ளார்.

இந்துவுன் குடும்பத்தாரும், வருங்கால மருமகன் தானே என்று நினைத்து தங்களிடம் இருந்த 33.75 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர்.

பணத்தை வாங்கிய பின், அந்த நபர் இந்துவிடம் செல்போனில் பேசுவதை நிறுத்தியுள்ளார். தொடர்ந்து போன் அ.டி.த்.தா.லும், அவர் பல்வேறு காரணங்கள் கூறி தவிர்த்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பணத்தை கேட்ட இந்துவுக்கு அவர் கொ.லை மி.ரட்டல் விடவே, இதை சற்றும் எதிர்பார்க்காத, இந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, உடனடியாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் இந்து புகார் அளித்தார்.

பொலிசார் இது குறித்து வ.ழக்கு பதிவு செய்து பெங்களூருவில் உள்ள அந்த பொறியாளரை தேடி வருகின்றனர்.

hey