முல்லைத்தீவில் டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதுண்டு கோர விபத்து : தந்தை சம்பவ இடத்திலே ப.லி : மகன் படுகாயம்முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு-பரந்தன் வீதியில்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு-பரந்தன் வீதியில் தேராவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உ.யிரிழந்ததுடன் அவரது மகன் படுகாயமடைந்துள்ளார்.

இன்று காலை வேளை உந்துருளியில் பயணித்த தந்தையும் மகனும் எதிரே வந்த டிப்பர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகினர்.

இந்த விபத்தின் போது சுதந்திரபுரம் கொலனி பகுதியினை சேர்ந்த 53 அகவையுடைய வள்ளிபுனம் ஜெயராசா என்பவர் உ.யிரிழந்ததுடன் அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தினை ஏற்படுத்திய டிப்பர் வாகனமும் சரதியும் புதுக்குடியிருப்பு பொலிசரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

hey