திருகோணமலை பேருந்து நிலையத்தில் இரும்பு பெட்டி ஒன்றினால் பரபரப்பு : அதிரடி படையினர் களத்தில்திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில்

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் ச.ந்தேகத்திற்கிடமான வகையில் இரும்பு பெட்டியொன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதால், இன்று காலை அங்கு ப.தற்ற நிலை காணப்பட்டுள்ளது.

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் மூதூர் மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளுக்கான பேருந்துகள் தரித்து நிற்கும் இடத்திற்கு அருகாமையில் குறித்த பெட்டியானது கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

அதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. விசேட அதிரடிப்படையினரது கு.ண்டு செயலிழக்கும் அணியினர் சம்பவம் இடத்திற்குச் சென்று பலத்த பாதுகாப்புடன் குறித்த பெட்டியைத் திறந்து பார்த்தனர்.

இந்த நிலையில், குறித்த பெட்டியானது இராணுவ சிப்பாய் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

hey