அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் – ஜனாதிபதிஅரச ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பளம் அதிகரிப்பு,. பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு செயல்முறையில் குழப்பம் போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

நேற்று மாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் 3 மாதங்களுக்கு ஒரு முறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்புகள் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

hey