வவுனியாவில் 4 பேருக்கு கோவிட்-19 தொற்று – சுகாதார பிரிவினர்வவுனியாவில் 4 பேருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றுபவருக்கு நேற்றைய தினம் (12.02) கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருடன் தொடர்புடைய 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இன்று (13.02) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதில் மேலும் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்று மாலை வெளியாகிய பி.சி.ஆர் முடிவுகளில் வவுனியா பொலிஸார் இருவருக்கும் கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் மேலும் 4 பேர் கோவிட்-19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப் படுத்துவதற்கான நடவடிக்கைகளைச் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

hey