கடலுக்கடியில் என்னம்மா பண்ணுறிங்க..? நடிகர் விஷாலின் முன்னால் காதலியா இது..?தமிழ் சினிமாவால்

தமிழ் சினிமாவால் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் விஷால்.முன்னணி நடிகராக வலம்வரும் இவர் தற்போது தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் தலைவராகவும் தயாரிப்பாளராகவும் உள்ளார்.29 படங்களில் நடித்துள்ள விஷால் தற்போது சமீபத்தில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆக்சன் திரைப்படம் சரியாக போகவில்லை என்றாலும் தற்போது அடுத்து அவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை மிகவும் நம்பியுள்ளார் விஷால்.இது மிஷ்கின் இயக்கத்தில் 2017ல் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.இதில் இவருடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் உள்ள இரண்டு முக்கிய நடிகர்கள் இன்னும் திருமணம் செய்யவில்லையே என ரசிகர்களிடம் அதிகம் கேள்வி கேட்கப்பட்டது.

அதுவேறு யாரும் இல்லை விஷால் மற்றும் ஆர்யாவிடம் தான் திருமணம் பற்றி அதிகம் கேட்கப்பட்டது. ஆர்யாவும் நடிகை சயீஷாவை காதல் திருமணம் செய்து முடித்துவிட்டார்.

விஷாலுக்கு, அனிஷா என்பவருடன் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் இப்போது இவர்களது திருமணம் நின்றுவிட்டது என்கின்றனர்.

இந்த நிலையில் அனிஷா கடலுக்கு நடுவில் யோகா செய்வது போல் போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். அது ரசிகர்களிடம் வைரலாக பேசப்படுகிறது.

hey