வவுனியாவில் சில இடங்களில் நீர்வெட்டு : முழு விபரம் உள்ளேவவுனியாவில் நீர் வழங்கல் திட்டத்தில் தடை ஏற்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் வரும் வவுனியா நகரை அண்டிய பிரதேசங்களில் உள்ள நீரிணைப்பு குழாய்களில் அவசர மேம்பாட்டினை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் எதிர்வரும் சனிக்கிழமை நீர் வழங்கல் செயற்பாடானது தடைப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரம், வைரவபுளியங்குளம், இறம்பைக்குளம், குடியிருப்பு, யாழ்ப்பாண வீதி, சூசைப்பிள்ளையார் வீதி, சகாயமாதாபுரம், தேக்கவத்தை, கற்குழி, மதவுவைத்தகுளம், குருமன்காடு, மன்னார் வீதி ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நீர் வழங்கல் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்குத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது.

hey