வவுனியா ஓமந்தை
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிகேய்தகுளம் பகுதியில் மோட்டார் சைக்கில் – பட்டா ரக வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பன்றிகேய்தகுளம் பிரதான வீதியில் இன்று (12.02.2021) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பன்றிகேய்தகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிலில் இருவர் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் மோட்டார் சைக்கலின் பின்புறமாக வந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் ஓமந்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்