வவுனியாவில் கோழி இறைச்சி ஏற்றிச்சென்ற கூலர் வாகனம் தடம் புரண்டு விபத்துவவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கூலர் ரக வாகனம் ஒன்று வீதியைக்கடக்க முற்பட்ட மாட்டுடன் மோத முற்பட்டு கூலர் ரக வாகனம் வீதியில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சிகளை ஏற்றிச் சென்ற கூலர் ரக வாகனம் புளியங்குளம் சந்திக்கு சற்று அருகில் வீதியைக்கடக்க முற்பட்ட மாட்டுடன் மோத முற்பட்டபோது வீதியில் தடம்புரண்டுள்ளது இதனால் வாகனத்தில் பயணித்த எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை .

ஏற்றிச் செல்லப்பட்ட கோழி இறைச்சிகளுக்கும் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் .

வவுனியாவில் கைவிடப்பட்ட கட்டாக்காலி மாடுகளினால் இவ்வாறு வீதிகளில் பல்வேறு விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது . இதனால் பல வாகனங்களும் வாகனத்தில் செல்பவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . பிரதான கண்டி வீதியிலேயே அதிகளவிலான விபத்துக்கள் கால்நடைகளுடன் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

hey