இலங்கைக்கு 400 இற்கும் மேற்ப்பட்ட சுற்றுலாப்பயணிகள் வருகைசுமார் 400க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளைத் தாங்கிய இரண்டு விமானங்கள் மத்தள விமான நிலையத்தில் இன்று தரையிறக்கப்பட்டது.

கஸகஸ்தானிலிருந்து 235 சுற்றுலாப் பயணிகளும், உக்ரேய்னிலிருந்து 179 சுற்றுலாப் பயணிகளும் இவ்வாறு நாட்டுக்குள் வருகை தந்துள்ளனர்.

கோவிட் கெடிபிடிகள் தளர்த்தப்பட்டதன் பின்னர், உக்ரேய்னிலிருந்து இதுவரையில் எட்டு குழுக்கள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விசேட சுகாதார வழிமுறைகளின் அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டின் சில பகுதிகளுக்கு பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

hey