வடக்கில் கால் பதிக்கப்போகும் சீனா : மூன்று தீவுகளில் வரப்போகும் திட்டம்யாழ்ப்பாண தீபகற்பத்தில் அமைந்துள்ள மூன்று தீவுகளில் எரிசக்தி திட்டத்திற்கு சீனா இலங்கை அரசாங்கத்திடம் ஒப்புதல் பெறுவது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஜப்பானுடனான கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான இலங்கையின் அண்மைய முடிவு இந்த ஆண்டு புதுடெல்லியின் நலன்களுக்கு ஒரே சவால் அல்ல என்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், தமிழ்நாடு கடற்கரையிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள யாழ்ப்பாண தீபகற்பத்தில் மூன்று தீவுகளில் சீன எரிசக்தி திட்டத்தை இலங்கை அனுமதித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, நைனாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத்தீவில் சீனாவில் சினோசோர்-எடெக்வின் கூட்டு முயற்சியை ஈடுபடுத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை கடந்த 18ம் திகதி ஒப்புதல் அளித்தது.

இந்த தீவுகள் யாழ்ப்பாண தீபகற்பத்துடன் ஒரு வரையறுக்கப்பட்ட படகு சேவையால் இணைக்கப்பட்டுள்ளன, அவை பெரும்பாலும் இலங்கை கடற்படையால் நிர்வகிக்கப்படுகின்றன.

இந்த திட்டம் குறித்து கவலை வெளிபடுத்தப்பட்டுள்ளதாக தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டத் தளம் இந்திய கடற்கரைக்கு அருகாமையில் இருப்பதையும், டெல்ஃப்ட் தீவு வடக்கு இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு மிக நெருக்கமான இடங்களில் ஒன்றாக இருப்பதையும் தி ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் வடக்கு உள்கட்டமைப்பில் சீன பங்கு வகிக்கும் முதல் நிகழ்வு எரிசக்தி திட்டம் அல்ல என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில், போ.ரி.னால் பா.திக்கப்பட்ட பகுதிகளுக்கான சீனாவின் 300 மில்லியன் டொலர் வீட்டுத் திட்டம் குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது.

இதேவேளை, சீன சந்தையில் இலங்கை தேயிலையை ஊக்குவிப்பதற்காக இலங்கை தேயிலை சபை, புஜியான் ஸ்டார் சீனா சர்வதேச வர்த்தக நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

15 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ், புஜியான் ஸ்டார் சீனா சர்வதேச வர்த்தக நிறுவனம் இலங்கையிலிருந்து ஆண்டுதோறும் 4 மில்லியன் கிலோவுக்கு மேற்பட்ட தேயிலை கொள்முதல் செய்யவுள்ளது.

இலங்கை தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அதிகாரப் போ.ராட்டத்தின் மத்தியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார்.

இம்ரான் கான் இலங்கை நாடாளுமன்றத்தில் சிறப்பு உரையாற்றவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-tamilwin-

hey