வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற தரம் 6 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும், மரநடுகை நிகழ்வும்வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில்

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் தரம் 6 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும், மரநடுகை நிகழ்வும் இன்று (10.02.2021) காலை சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ.கே.உபைத் தலைமையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா, சூடுவெந்தபுலவு பிரதான வீதியில் இருந்து தரம் 6 இற்கு அனுமதி பெற்ற புதிய மாணவர்கள் பாண்ட் வாத்தியத்துடன் பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டதுடன், பாடசாலையின் தரம் 7 மாணவர்களால் சின்னம் அணிவிக்கப்பட்டு புதிய மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மரநடுகையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியும், மாணவர்களிடையே மரநடுகைப் பண்பை மேம்படுத்தும் நோக்கிலும் புதிதாக அனுமதி பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் உள்ளிட்ட 53 மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இணைந்து பாடசாலை வளாகத்தில் மரநடுகையிலும் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் பாடசாலை பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

hey