சமந்தாவிற்கு கோவில் கட்டிய ரசிகர்கள் : என்னடா பண்ணி வச்சிருக்கிறீங்க : சிரிப்ப அடக்க முடியலநடிகை சமந்தா

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா திரைப்பட மூலம் அறிமுகமானார் நடிகை சமந்தா. இதே படம் தெலுங்கில் யே மாயா சேஸ்வே என்ற பெயரில் வெளிவந்தது அதே படம் மூலமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

முதல் படத்திற்கே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார் சமந்தா. இதன் பின் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி போன்ற படங்களில் நடித்தார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சமந்தாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ராஜமௌலி இயக்கிய இகா தான் இப்படம் தமிழில் நான் ஈ என்ற பெயரில் வெளிவந்தது.

நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா தற்போது வரை சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமந்தாவின் தீவிர ரசிகர்கள் சிலர் சமந்தாவிற்கு கோயில் கட்டியுள்ளனர். அந்த கோவில் சிலை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை சமந்தா என்று சொன்னால் நாக சைதன்யா கூட நம்ப மாட்டார் என்று பலரும் கலாய்த்து வருகின்றனர்.

hey