திருமண நிகழ்வில் மணமக்கள் உட்பட 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதிகுருணாகல் அம்பான்பொல பிரதேசத்தில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்துக்கொண்ட மணமக்கள் உட்பட 136 பேருக்கு கோவிட் – 19 வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்த கோவிட் – 19 கொத்தணியின் வைரஸ் துரிதமாக பரவும் என்பதுடன் அதிகளவிலான நோய் அறிகுறிகளை காண்பிப்பதால், வைரசின் புதிய திரிபாக இருக்கலாம் என சுகாதார துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 21 ஆம் திகதி அம்பான்பொல பிரதேசத்தில் இந்த திருமண வைபவம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தின் வரவேற்பு வைபவம் கடந்த ஜனவரி 24 ஆம் திகதி கம்பஹா அத்தனகல்லையில் நடைபெற்றுள்ளதுடன் அதில் 260 பேர் கலந்துகொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கோவிட் – 19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 136 பேரில் 96 பேர் மினுவங்கொடை உடுகம்பளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனைய 40 பேர் அம்பான்பொல பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

hey