இலங்கையில் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடுவதற்கு அனுமதியில்லை – மீறுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகாதலர் தினத்தை கொண்டாடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடுவதற்கு அனுமதியில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளம் ஊடாக அவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்வது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான விடயங்களுக்காக ஹோட்டல்கள் மற்றும் நிகழ்வு மண்டபங்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

hey