கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இளம் தம்பதி தலைமறைவுகோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் தப்பிச் சென்று மறைந்திருந்த இளம் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொஸ்வத்தை, பொத்துஅட்டவன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தம்பதியை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கமைய கொஸ்வத்தை பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டவர்கள், ஹெந்தல, வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர்களாகும்.

ஜாஎல பிரதேசத்தை சேர்ந்த தொழிற்சாலையில் பணியாற்றும் போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

hey