வவுனியா – செட்டிகுளம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையை காணவில்லை : மக்களிடம் உதவி கோரியுள்ள குடும்பத்தினர்செட்டிகுளம் சண்முகபுரம் பகுதியில் வசித்து வரும் 2 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை என அவரின் மனைவி செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

கடைக்கு செல்வதாக தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை ( 2021.02.05 ) அன்று சென்றுள்ளார் 2 நாட்கள் கடந்தும் கணவன் வீடு திரும்பவில்லை.

அதனையடுத்து அவரின் மனைவியால் கணவனை காணவில்லை என தெரிவித்து செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.தந்தையை காணாது அவரின் இரண்டு பிள்ளைகளும் உணவினை தவிர்த்து சோகத்தில் உள்ளனர்.

இவரை யாராவது கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது கீழேயுள்ள இலக்கத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்துமாறு பொது மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

மனைவி – 0766975067
தங்கை – 0775608964

hey