வவுனியாவில் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் அலுவலகம் திறந்து வைப்புவன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் அலுவலகம்

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் அலுவலகம் ஒன்று வவுனியாவில் நேற்று(2021.02.05) திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா, மன்னார் வீதியில் உள்ள கலைமகள் விளையாட்டு மைதானம் அருகில் குறித்த அலுவலகம் திறந்து வைகப்பட்டது. கைத்தொழில் அமைச்சர் விமல்வீரவன்சவின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளராக ம.புஸ்பதேவா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைத்தொழில் அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் அலுவலகத்தை மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன திறந்து வைத்துடன், தேசியக் கொடியையும் ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வில், பொதுஜன பெரமுன கட்சியின் தமிழ் பகுதி இணைப்பாளர் பிறேம், மதகுருமார், அமைச்சர் விமல் வீரவன்சவின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

hey