நயன் மற்றும் விக்னேஸ் சிவன் கலாச்சார உடையில் சும்மா பட்டய கிளப்பிறாங்க : வைரலாகும் புகைப்படம்தமிழ் சினிமாவில் தற்போது பிரபல ஜோடியாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். ஆயிரம் சர்ச்சைகள் எழுந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் வெளிநாடுகளுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சேர்ந்து ரெளடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலமாக ஒரு சில படங்களை தயாரித்து வருகின்றனர்.

அப்படித்தான் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எனவே நேற்று நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ரோட்டர்டாம் என்ற நகரில் டைகர் காம்படிஷன் இன்டர்நேஷனல் திரைப்பட விழா என்ற விழாவில் கலந்துகொண்டனர்.

அப்போது நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பாரம்பரிய வேட்டி சேலையில் பட்டையைக் கிளப்பும் படி விழாக் குழுவினருடன், சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் நயன்தாரா-விக்னேஷ் இருவரும் திருமண தம்பதியர்கள் போலவே காட்சியளிப்பதால், அவர்களது திருமணத்திற்கு ஒத்திகை பார்த்தது போலவே இருந்தது.

மேலும் இந்த விழாவில் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் நயன்-விக்னேஷ் தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டது. கூடிய விரைவில் இந்தப் படம் வெளியாகும் என்ற தகவலும் தற்போது கிடைத்துள்ளது.

hey