கொழும்பு – புத்தளம் ஏ -03 பிரதான வீதி நாளை காலை 6 மணி முதல் மூடப்படுகின்றதுகொழும்பு – புத்தளம் ஏ -03 பிரதான வீதி நாளை (6) காலை 6 மணி முதல் மூடப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதி நாளை மறுதினம் (7) மாலை 6 மணி வரை மூடப்பட்டு இருக்கும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீர்கொழும்பு – கல்கந்த புகையிரத சந்தியில் திருத்த வேலைகள் இடம்பெறவுள்ளதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு மக்கள் மற்றும் ஓட்டுநர்களை பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.

hey