வவுனியாவில் திருமண மண்டபத்தில் குழவிக் கொட்டுக்கு இலக்காகி மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிவவுனியா இறம்பைக்குளம் ஆலயம்

வவுனியா இறம்பைக்குளம் ஆலயம் ஒன்றுடன் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் குழவிக் கொட்டுக்கு இலக்காகி மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் இன்று (04.02.2021) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, இறம்பைக்குளம், நாகபூசனி அம்மன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டவர்கள் மீது மண்டபத்தின் அருகில் இருந்த மரத்தில் இருந்து கலைந்து சென்ற குழவிகள் கொட்டியதில்,

வவுனியா மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெயக்கெனடி உள்ளிட்ட மூவர் பாதிப்படைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரும் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளனர்.

குறித்த மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் இதற்கு முன்னரும் பல தடவைகள் குழவிக் கொட்டுக்கு சிலர் இலக்காகியுள்ளனர்.

இது தொடர்பில் ஆலய மண்டப நிர்வாகத்தினர் ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுக்காமையின் காரணமாகவே பலரும் குழவிக் கொட்டுக்கு இலக்காகி வருவதாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

hey