புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கோவிட் 19 தொற்று உறுதிமுல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், நேற்று வெளிவந்த கோவிட் 19 பரிசோதனை முடிவின்போது ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண் கடந்த மாதம் 19ஆம் திகதி கண்டியிலிருந்து புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள தனது கணவர் வீட்டுக்கு வந்துள்ளார்.

அவர் தொடர்ந்து 29ஆம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு கோவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகியிருந்ததுடன் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

hey