நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 11 விமானங்கள் ஊடாக 882 பேர் நாடுதிரும்பினர்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 530 பேர் விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணிநேரத்தில் குறித்த விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த காலப்பகுதியில் 11 விமானங்களில் 882 பேர் நாடுதிரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இவர்களுள் தொழில் நிமித்தம் டுபாய் சென்றிருந்த நிலையில் நிர்க்கதிக்குள்ளான 289 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இதனிடையே குறித்த காலப்பகுதியில் பல்வேறு தேவைகளின் நிமித்தம் 648 பேர் 13 விமானங்களில் வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளனர்

சவுதி அரேபியா நோக்கி 223 பேரும் டுபாய் நோக்கி 150 பேரும் கட்டார் நோக்கி 80 பேரும் இவ்வாறு பயணித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன

hey