அனுராதபுரத்தில் கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் இரு பெண்களுக்கு நேர்ந்த கதிஅனுராதபுரத்தில் இருந்து கொழும்பு

அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் இருந்த பெண்கள் இருவர் மயக்கமடைந்துள்ளனர்.

பேருந்தில் பெண்கள் மயக்கமடைந்தவுடன் அவர்களின் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த இளைஞன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இளைஞனை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேருந்தில் பயணித்த குறித்த பெண்களுக்கு இளைஞன் ரோல்ஸ் வழங்கியுள்ளார். அதனை உட்கொண்டவுடன் பெண்கள் இருவரும் மயமடைந்ததாக சாலியவெவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான குற்ற செயல்கள் இடம்பெறும் என்பதனால் பேருந்துகளில் அடையாளம் தெரியாத நபர்களுடன் பழக வேண்டாம் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அடையாளம் தெரியாத நபர்கள் வழங்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டாம் எனவும் அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

hey