வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் குறைந்த வட்டியில் கடன் – மஹிந்த ராஜபக்ஷஇலங்கையில் குறைந்த விலையில் கடன் வழங்குவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன் வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் கடன் சுமையில் உள்ள மக்களுகாக கடன் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கடன் பணத்தின் பெறுமதியை 100000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு வட்டி வீதத்தை நூற்றுக்கு 9 இல் இருந்து 6 வீதம் வரை குறைப்பதற்கும் பிரதமர் யோசனை முன்வைத்திருந்தார்.

பல்வேறு நுண்நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று, கடன் சுமையில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை அந்த கடன் சுமையில் இருந்து மீட்டு எடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக கூட்டுறவு கிராமிய வங்கிகள் மற்றும் சிக்கன மற்றும் கடன் கூட்டுறவு நிலையங்கள் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறைந்த வட்டியிலான கடன் யோசனையை வடக்கு மற்றும் வட மத்திய மாகாணத்தின் மாவட்ட செயலகங்களிலும் இதுவரையில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

hey