ஆடைதொழிற்சாலை பணியாளர்கள் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதிமஹியங்கனை பகுதியில் உள்ள ஆடைதொழிற்சாலை பணியாளர்கள் 75 பேருக்கு கொ.ரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட 324 பி சி ஆர் பரிசோதனைகளின் பிரகாரம் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது.

இதனிடையே குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை குறித்த பகுதியில் உள்ள மற்றுமொரு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஏனைய ஊழியர்களுக்கு பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையின் நிறுவனருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வைத்தியர் நெவில் பெர்ணான்டோ கொழும்பு தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.இதனிடையே காலி பலப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இதேவேளை பாதுகாப்பான முறையில் வைத்தியசாலை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

hey