முகக் கவசம் அணியாமல் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட 10 பேருக்கு 50000 ரூபா அ.பராதம்தனிமைப்படுத்தல் விதிகளை மீறி முகக் கவசம் அணியாமல் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட 10 பேருக்கு காலி நீதவான் ஹர்ஷனா கெகுனாவெலா தலா 5000 ரூபா வீதம் அ.பராதம் விதித்துள்ளார்.

அ.பராதம் விதிக்கப்பட்ட பத்து பேரில் மூன்று பெண்கள் அடங்குவர்.

உனவடுனவின் இலுக்பிட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முகக் கவசம் இல்லாமல் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட நபர்களுக்கு எதிராக ஹபராதுவ பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

சந்தேக நபர்களை ஹபராதுவ பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் விமல் பிரேமவன்ச நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
இதனையடுத்து தலா 5000 ரூபா வீதம் 50000 ரூபா அ.பராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

hey