இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த முதலாவது இளம் வைத்தியர்கொவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த இளம் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார்.பன்முகத் திறமை கொண்ட சிறந்த மனிதாபிமானம் மிக்க மருத்துவராக குறித்த மருத்துவர் திகழ்ந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த மருத்துவருக்கு கூடுதல் கண்காணிப்பு தேவை என அண்மையில் இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கமும் சுகாதார அமைச்சிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

31 வயதான கயான் தந்தநாராயண என்ற மருத்துவரே இவ்வாறு கொவிட் தொற்றுக்கு இலக்காகி மரணித்துள்ளார்.
இலங்கையில் முன்னரங்க பணிகளில் ஈடுபட்டு வந்த மருத்துவர் ஒருவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்த சம்பவமாக இது கருதப்படுகின்றது.

ராகம வைத்தியசாலையில் இந்த மருத்துவர் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கொவிட் தொற்று காரணமாக சுவாசப்பையில் உபாதை ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த டொக்டர் கயான் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

hey