வவுனியா உட்பட வடக்கில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்றுயாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் வடக்கில் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 373 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வவுனியாவைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 373 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வவுனியாவைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை பி.சி.ஆர். பரிசோதனையில் யாழ்பாணத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

hey