வடக்கில் நேற்றைய தினம் 7 பேர் உட்பட வவுனியாவில் ஒருவருக்கும் தொற்று உறுதிவவுனியா

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று(29.01.2021) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் வடக்கில் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 359 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வவுனியாவைச் சேரந்த ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை பி.சி.ஆர். பரிசோதனையில் மன்னாரைச் சேர்ந்த 5 பேருக்கும், முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

hey