தனியார் பேருந்து தடம்புரண்டு விபத்து : 13 பேர் படுகாயம்பொலன்னறுவை – மட்டக்களப்பு பிராதன வீதியின் புனானை பகுதியில் இன்று தனியார் பேருந்தொன்று தடம்புரண்டு விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்தொன்றே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது.

பேருந்து புனானை பகுதியில் பயணித்த போது முன்னாள் சென்ற வாகனத்தை முந்தி செல்லமுற்பட்ட நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 13 பேரில் மூவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

hey