வவுனியாவில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதிவவுனியா

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (28.01.2021) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் வடக்கில்7 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 383 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வவுனியாவைச் சேர்ந்த இருவருக்கும் மன்னாரைச் சேர்ந்த 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் கடந்த 28 நாட்களில் வவுனியாவில் 300க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

hey