ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் 38 பணியாளர்களுக்கு கொரோனாஆடைத் தொழிற்சாலை

பொலநறுவை லங்காபுர பகுதியில் இயங்கும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் 38 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை முதல் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதாக பொலனறுவை சுகாதார சேவைகளின் பிராந்திய பணிப்பாளர் டாக்டர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆடை தொழிற்சாலையில் சுமார் 800 பேர் பணியாற்றுகின்றனர். அங்கு பணியாற்றும் சுமார் 300 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.

விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, பரிசோதனை முடிவுகள் வரும் வரை, ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

hey