வடக்கு மாகாணத்தில் 15 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி – த.சத்தியமூர்த்தியாழ். போதனா வைத்தியசாலை

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் ஆய்வுகூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் 15 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மூவர், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஐவர், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் என 15 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தகவலை யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

hey