சகல வெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கைவெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெதுப்பக உணவுப் பொருட்களின் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டு ஆரம்பத்துடன் சகல வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என ஏற்கனவே அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

அத்துடன், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வெண்ணைக்கு அறவிடப்பட்டு வந்த 200 ரூபாய் வரி 600 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

இதற்காக வழங்கப்பட்ட நிவாரண காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறமையால் வெதுப்பக உணவுகளின் விலை அதிகரிப்பை புதிய ஆண்டில் எதிர்பார்க்க முடியும் என கடந்த மாதம் வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

hey