நாளைய தினம் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைவருக்கும் அன்டிஜன் பரிசோதனைநாளைய தினம் போயா விடுமுறை என்பதால் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைவருக்கும் கொவிட் 19 பரிசோதனை மேற்கொள்ள காவல்துறையினர் தீர்மானித்துள்ளனர்.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் ஒவ்வொரு நபரிடமும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.

நீண்ட வார இறுதி விடுமுறை தினம் வருகின்றமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

hey