வவுனியா நகரின் முடக்கப்பட்ட பல பகுதிகள் இன்று விடுவிப்பு



வவுனியாவில் கொரனா தொற்று அதிகரித்த நிலையில் தனிமைப்படுத்தப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட வவுனியா நகர் இன்று (2021.01.25) திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டது.

வவுனியா பட்டானிசூரை சேர்ந்த கர்பிணி பெண் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நிலையில் குறித்த கிராமம் முடக்கப்பட்டது.

அத்துடன் வவுனியா நகரப் பகுதியில் தொற்றாளர்கள் அதிகரித்துவந்த நிலையில், பிரதான நகரம் உட்பட்ட 19 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது. பின்னர் கடந்த 18 ஆம் திகதி வவுனியா நகர மத்தி தவிர்ந்த ஏனைய பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்றைய தினம் மில் வீதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் வவுனியா மொத்த வியாபார நிலையம் மூடப்பட்டுள்ளது.

அத்தோடு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் அன்டிஜன் பரிசோதனை செய்யப்படாத பெருமளவு வர்த்தக நிலையங்கள் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey