தென்னிலங்கையில் 3 நாட்களில் 3 இடங்களில் திருமண நிகழ்வு நடத்திய புதுமண தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதிதென்னிலங்கையில் 3 நாட்களில் 3 இடங்களில் திருமண நிகழ்வு நடத்திய புதுமண தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த திருமண நிகழ்வுகள் பாதுக்க, வட்டரெக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக 3 நிகழ்விலும் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரவு தெரிவித்துள்ளது.

கடுவெல, பாதுக்க மற்றும் வட்டரெக்க ஆகிய பிரதேசங்களில் இந்த திருமண நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த திருமண நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி பெறவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் நிகழ்வு மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்வில் மணமகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதனை தொடர்ந்து திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 25 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

hey