மீண்டும் இலங்கையில் ஒன்லைன் விசாவை கோரும் வெளிநாட்டவர்கள்…!!கட்டுநாயக்க விமான நிலையத்தை திறந்த பின்னர் இலங்கை வருவதற்காக 198 வெளிநாட்டவர்கள் விண்ணப்பித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் கயான மிலிந்த தெரிவித்துள்ளார்.

விசா விண்ணப்பித்த நபர்களின் தரவுகள் ஏற்கனவே சேரித்து வைக்கப்பட்டுள்ளன. எனினும் பாதுகாப்பு காரணத்திற்கமைய இலங்கைக்கு அழைக்க முடியாத நபர்களை தவிர்த்து ஏனைய அனைவரும் விசா வழங்கப்படும்.

ஜனவரி மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் ஒன்லைன் மூலம் விசா விண்ணப்பிக்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் அந்த செயற்பாட்டை மீள ஆரம்பிக்குமாறு வெளிநாட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதனை தொடர்ந்து நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு மத்தியில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நபர்கள் உள்ளார்களா என ஆராயவதற்கு புலனாய்வு பிரிவினரால் விசேட பிரிவு நியமிக்கப்பட்டுள்ளது.

hey